அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காப் பள்ளியில் கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, வனவிலங்கு புகைப்படம் எடுத்தல், பறவை ஓவியங்கள் தீட்டுதல் மற்றும் பறவைகளை அடையாளம் கண்டறிதல் எனும் பயிற்சிகள் மற்றும் பூங்கா தூதுவர்கள் என்ற முகாமை 6 குழுக்களாக பிரித்து மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் பயிற்சி பொதுமக்கள் மத்தியில் வன உயிரின பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு உதவியாக இருந்தது. இன்று நடந்த இந்த பயிற்சியில் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணா உயிரியல் பூங்காவில் வனவிலங்கு புகைப்பட பயிற்சி முகாம் - அண்ணா உயிரியல் பூங்கா
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பள்ளியில் வனவிலங்கு புகைப்பட பயிற்சி முகாம் நடைபெற்றது.
வனவிலங்கு புகைப்பட பயிற்சி முகாம்
வனவிலங்கு புகைப்படம் எடுத்தலின் அடிப்படைகள், வனஉயிரின அடையாளங்களை களத்தில் காண்பது, புகைப்படும் எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி பயற்சி அளித்தார். கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் யோகிஷ் சிங் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார். பூங்கா துணை இயக்குநர் சுதா மற்றும் பூங்கா அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.