சென்னை: பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (21). இவர் தந்தை, பாட்டி அரவணைப்பில் வளர்ந்த கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கீர்த்தனா பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்த நிலையில், அவரின் கணவர் ராமசந்திரன் குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
தாய் பாசமின்றி வளர்ந்த கீர்த்தனா தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து யாரிடம் சொல்வதென்று தெரியாமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
தற்கொலை முயற்சி
மன வருத்தத்தில் கணவருடனும்உரையாடல்களைத் தவிர்த்து வந்த கீர்த்தனா, கடந்த வியாழகிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை கண்ட கணவர் ராமசந்திரன் உடனடியாக அருகிலுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.