தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் தகராறு - மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி - பல்லாவரம் செய்திகள்

சென்னை: கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீ குளித்த மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சென்னை
சென்னை

By

Published : Dec 18, 2020, 9:20 PM IST

பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (40). ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்துவரும் இவருக்கு திருமணமாகி வசந்தி (35) என்ற மனைவி உள்ளார்.

கடந்த சில தினங்களாக சரவணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வசந்தி யாரிடமும் பேசாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று (டிசம்பர் 18) காலையில் கணவர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டின் உள்ளே சென்ற வசந்தி, தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக வசந்தி உடலில் பற்றிய தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details