சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ரஹ்மத்துல்லா - கார்த்திகா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த ரஹ்மத்துல்லா, கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திகா, கடந்த ஒருமாத காலமாக தாம்பரத்திலுள்ள ஸ்கேன் சென்டரில் வேலை செய்துவந்துள்ளார். இதனால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (செப். 27) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. பின்னர் ரஹ்மத்துல்லா வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா, வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஹ்மத்துல்லா, வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.