சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அதிமுகவின் வன்முறையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், திமுகவை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற 144 தடை சட்டம் போடப்பட்டது.
திமுகவைப் பொறுத்தவரை, நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. திமுகவை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு. வன்முறை நடக்கும்போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். மூன்று கொலை செய்தவர் தான், எடப்பாடி பழனிசாமி. மீண்டும் அப்படி மாறிவிடுவேன் என கூறுகிறாரா?