ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரி அக்கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் என தெரிவித்தார். அதை ஏற்காத நீதிபதி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவருக்கு ஏன் வேலைவாய்ப்பு?
சென்னை: அனைத்து திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதால் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில், வெளி மாநிலத்தவர் நியமிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளது? ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்காமல், அது நடைமுறை படுத்த உள்ள இடத்திற்கு எதிராக போராடலாமே? வேலைக்கு பின்னர் போராட்டங்கள் என்ற நிலை மாறி, போராட்டங்கள் செய்வதே தற்போது வேலையாக மாறிவிட்டது. ஒரு திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் அந்த திட்டத்தால் என்ன நன்மை, தீமை என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் அழைப்பை ஏற்று போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர். இளைஞர்களை வேலைக்கு செல்லவே ஊக்கப்படுத்த வேண்டும், அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அல்ல. அனைத்து திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம் செய்தால் எப்படி உற்பத்தி அதிகரிக்கும், லாபகரமான மாநிலமாக தமிழ்நாடு எவ்வாறு மாறும். அனைத்து திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், இங்குள்ள வேலைகளில் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.