தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் கே.என். நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? - ஜெயக்குமார்

திருச்சியில் எம்.பி சிவா வீட்டை அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோதலுக்கு மூல காரணமான உள்துறை அமைச்சர் நேரு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 5:01 PM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். நாளை (மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் மார்ச் 26ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடக்க இருக்கிறது.

எம்.பி சிவா வீட்டை தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன் - ஜெயக்குமார்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜெயக்குமார், "அதிமுக தொண்டர்களின் விருப்பம் ஒற்றை தலைமை வேண்டும் என்பதாகும்.

கழக சட்ட விதிகளின்படி தேர்தல் நடைபெற போதிய கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலை அவசர அவசரமாக நடத்தவில்லை, சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடைபெறுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் உள்ளரங்கத்தில் பேசிய கருத்துகளுக்கு பதில் அளிக்க முடியாது.

பொதுவாக ஒரு அரசியல் தலைவர் பொது வெளியில் பேசும் கருத்துக்களுக்கோ, செய்தியாளர் சந்திப்பிலேயோ, பொதுக் கூட்டத்திலோ இது போன்ற கருத்துக்களை தெரிவித்தால் அதற்கு பதில் சொல்லாம். பத்திரிக்கையில் வரும் கருத்துக்களை வைத்து அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையை ஏற்று கொண்டுள்ள கட்சிக்கள் உடன் தான் கூட்டணி. எனினும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். அதிமுக என்பது தேர்தல் களத்தில் ரயில் எஞ்சின் போன்றது மற்ற கட்சிகள் எல்லாம் பெட்டிகளை போன்றது.

டிடிவி தினகரன், ஓபிஎஸை சந்திப்பேன் என்பது சந்தர்பவாதம். எம்ஜிஆர், ஜெயலலிதா சந்திப்புக்கு முன்பு டி.டி.வியை தான் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். பின்னர் சசிக்கலாவை சந்தித்து உள்ளார். பெரியகுளத்தில் அவரது பரிந்துரையின் பேரிலேயே சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். எனவே டிடிவி தான் ஓபிஎஸின் அரசியல் குரு. அதிமுகவில் ஆட்சியில் இருக்கும் போது ரகசியமாக டிடிவியை சந்தித்து துரோகம் செய்தவர் தான் ஓபிஎஸ் என்று கூறினார்

அமமுக ஒரு கட்சியே அல்ல. அதிலிருந்தும், பிற கட்சிகளிலிருந்து தொண்டர்களை இழுக்கும் நிலையில் அதிமுக இல்லை. அமமுக காலியான கம்பெனி, வருபவர்களை அதிமுக ஆதரிக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை. திருச்சியில் எம்.பி சிவா வீட்டை அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவே மிகப் பெரிய வேதனை. ஒரு எம்பி வீட்டிற்கே பாதுகாப்பு இல்லை. அதன்பின் கே.என்.நேரு போய் சமாதானம் பேசுகிறார். இந்த மோதலுக்கு மூல காரணமான உள்துறை அமைச்சர் நேரு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:சட்ட விரோதமாக வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ததாக தொடர்ந்த வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details