தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தலைமைத் தகவல் ஆணையரான ராஜகோபால் ஐஏஎஸ் யார்?

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். ராஜகோபால் ஐ.ஏ.எஸ் குறித்து இங்கே காண்போம்...

ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ்

By

Published : Nov 21, 2019, 11:45 AM IST

தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா வயது மூப்புக் காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலராக இருந்த ஆர். ராஜகோபால், தலைமைத் தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

* 1984ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார் ; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் பயின்றவர்.

* மனைவி மீனாட்சியும் ஐ.ஏ.எஸ் அலுவலர்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

* 1990களின் இறுதியில் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர்.

* தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலத்துறை, சிமென்ட் கார்ப்பரேஷன், வேளாண்மைத்துறை, திட்டக்குழு, கலால் துறை, காதி மற்றும் கைத்தறித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைச் செயலர், செயலராகப் பணி செய்துள்ளார்.

* கடந்த 2014 பிப்ரவரி 6இல் முதல் டெபிடேஷனில் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார்.

* தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக ராஜகோபால் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details