திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகைதந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் சென்றுவிட்டால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. அது சமூக நீதிக்கே எதிரானதாக அமையும்.
நாங்கள் தான் எதிர்க்கட்சி: இதை திரும்ப திரும்ப சொல்வதில் எங்களுக்கு கூச்சமாக உள்ளது - அன்புமணியின் ஆதங்கம்... எனவே பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். பெல் நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நிறுவனம், எந்த வகையிலும் பெல் நிறுவனத்தைத் தனியார் மயமாக்கக்கூடாது. திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக முறையாக நடக்கவில்லை.
2017ல் 350 கோடி ஒதுக்கீடு செய்தும் எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை. துறைசார்ந்த அமைச்சர் இங்கு இருக்கிறார், அவர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி பிரச்சினை மிகமுக்கிய பிரச்சினை, 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்த இருக்கிறது.
அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக திட்ட அறிக்கையை விவாதிக்க உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, சட்டத்திற்கு எதிரானது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க எந்த அதிகாரமும் இல்லை.
காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பு எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே, அணை கட்டுவதைப் பற்றிப் பேச அதிகாரம் இல்லை. எனவே இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு இந்த கூட்டம் நடைபெறாமல் இருக்கத் தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சனாதான தர்மம் குறித்து ஆளுநர் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு பழையது குறித்து பேச வேண்டாம். நாட்டில் தற்போது மக்களுக்குத் தேவை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை தான். அது குறித்து தான் பேச வேண்டுமே தவிர 2000, 3000 ஆண்டுகள் பழமையானதை குறித்துப் பேசினால் எந்த பயனும் இல்லை.
நாங்கள் தான் எதிர்க்கட்சி: இதை திரும்ப திரும்ப சொல்வதில் எங்களுக்கு கூச்சமாக உள்ளது - அன்புமணியின் ஆதங்கம்... அதிமுக சட்டசபையில் எண்ணிக்கை அடிப்படையில் தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதைப் பேசி அதை நிறைவேற்ற வைப்பது தான் எதிர்க்கட்சியின் வெற்றியாக உள்ளது. அந்த வகையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி, இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்குக் கூச்சமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது பாமக: அன்புமணி ராமதாஸ்!