தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டட விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் - Building rules to follow when providing electrical connection

மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டட விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தல்
கட்டட விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தல்

By

Published : Mar 20, 2021, 2:05 PM IST

Updated : Mar 20, 2021, 3:04 PM IST

சென்னை உயர் நீதிமன்றம், உரிய அனுமதியின்றி கட்டடப் பணிகள் மேற்கொள்வதை தடுக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு அவற்றிற்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், கட்டடப் பணி முடிப்பு சான்றிதழை கட்டாயமாக்கி 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது. அதைப் பின்பற்றி, புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டட பணி முடிப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் உத்தரவு பிறப்பித்து சில மாதங்களே ஆன நிலையில், அதை திரும்பப் பெறுவதாக டான்ஜெட்கோ விநியோக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோயம்பத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டான்ஜெட்கோ தரப்பில், குறைந்த மின்னழுத்தத்தை பயன்படுத்தும் சிறிய கடைகள், ஒரு குடியிருப்பில் இருக்கின்ற சிறிய பகுதிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பணி முடிப்பு சான்றை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும், ஆனால் சொத்து வரி சான்றை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகள், சீல் வைத்த உடனேயே அந்த கட்டுமானத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், மின் இணைப்பு வழங்கும் போது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளை கண்டிப்புடன் பின்புற்றும்படி டான்ஜெட்கோவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Last Updated : Mar 20, 2021, 3:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details