தமிழ் புத்தாண்டு தற்போது சித்திரை 1ம் தேதியாக இருக்கும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்தாண்டு தை 1ம் தேதிக்குத் தமிழ் புத்தாண்டை மாற்றப்போவதாகப் பல தகவல்கள் வெளிவந்தன. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்தாண்டு பொங்கல் அன்று அவரது சமூக வலைதளத்தில் பொங்கல் வாழ்த்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழக அரசின் 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் தமிழ் புத்தாண்டு தினம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அரசின் விடுமுறை அறிவிப்பில் ஜனவரி 15 பொங்கல் என்றும், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்றும் வெளியாகி உள்ளது.