தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க வாட்ஸ் அப் குழு - வாட்ஸ் அப் குழு

ஆவின் பால் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க, வாட்ஸ் அப் குழு உருவாக்கி தகவல்களை பகிர அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப் குழு
வாட்ஸ் அப் குழு

By

Published : Nov 11, 2021, 11:21 AM IST

சென்னை: பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றிய பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

* மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெறப்படும் பாலை தங்குதடையின்றி இணையத்தின் பால் பண்ணைகளில் பெற்று பால் பதப்படுத்துதல் மற்றும் பால் சிப்பம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

* துணை பதிவாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் மழை காரணமாக பால் கொள்முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* பால் கொள்முதல் வழித்தட வாகனங்கள் சங்கங்களில் பாலை எவ்வித தடையுமின்றி முறையாக இயங்குவதை கண்காணிக்க வேண்டும். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சங்கங்களுக்கு நேரடியாக சென்று பால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் இடு பொருட்களை சேமிப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான அரசு சேமிப்பு கிடங்குகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்றிட வேண்டும்.

* ஒன்றியத்தின் கால்நடை மருத்துவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கறவை மாடுகளை கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

* வெள்ளத்தின் காரணமாக பசும் புல் கிடைக்காத நிலையில் தேவையான உலர் தீவனங்கள் வைக்கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை பெற்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து சங்கத்திலும் துணை பதிவாளர்கள், பொது மேலாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் முதுநிலை ஆய்வாளர்களின் தொலைபேசி எண்கள் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

* மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பால் விநியோகம் செய்ய குழு அமைக்கப்பட வேண்டும்.

* மாவட்டங்களில் உள்ள பாலகங்கள் மற்றும் பால் விநியோக பகுதிகளில் தேவையான பாலை இருப்பில் வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும்.

* மாவட்ட ஒன்றியங்களில் 24 மணிநேரமும் இயங்கும் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* அப்லோடாக்சின் பூஞ்சை போன்றவை உருவாகாத வண்ணம் தீவனங்கள் உலர்வாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.

* துணைப் பதிவாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட தலைமை இடத்திலேயே எந்நேரமும் இருக்க வேண்டும். மின்தடை காலங்களில், தேவையான ஜெனரேட்டர் மற்றும் டீசல் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் துணைப் பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ் ஆப் எண் பகிரப்பட வேண்டும்.

* பால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள இடத்தின் விவரங்கள், பாலகங்களின் விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* அரசு தொலைக்காட்சி செய்தித்தாள் ஆகியவற்றில் பால் விநியோகப் பணிகளை தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொலைப்பேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்

* தீபாவளி இனிப்பு விற்பனையில் ஆவின் 18 நாள்களில் ரூ.83 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் மருமகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details