சென்னை :முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கடந்த 2019ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினேன். அந்த மனுவின் நிலை என்ன. தன்னை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரையின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு என்ன தடை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தன் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்பான விவரங்களைத் தர வேண்டும் என தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலகத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தேன்.