மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிங்கி (30). இவர் தனது முதல் கணவர் உத்தம் மண்டலை பிரிந்து, கிருஷ்ணன் பகதூர் (26) என்ற இளைஞருடன் சென்னை அண்ணாநகரில் கடந்த ஆறு மாதமாக வசித்துவந்தார்.
மேற்கு வங்க பெண் சென்னையில் அடித்துக் கொலை! - சென்னை
சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணா நகரில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு வெளியில் சென்று திரும்பிய கிருஷ்ணன் பகதூர், குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பிங்கியின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளைப் பார்த்தபோது கொலைசெய்யப்பட்ட பிங்கியின் வீட்டுக்குள் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வந்துசெல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிங்கியின் இரண்டாவது கணவர் கிருஷ்ணன் பகதூர் உட்பட மூன்று பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.