சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். வாழ்வில் வழிதவறி குற்றமிழைத்தவர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை சிறைத்துறையுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
அதன்படி தொழிற்பயிற்சி முடித்து வெளியேறிய முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும்வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலசங்கம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 10 முன்னாள் கைதிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை, சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் இன்று (ஆக.8) வழங்கினார்.