சென்னை:தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 27) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆக.28 ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆக.29 முதல் செப்.2 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க:அட நயன்தாரா குழந்தைங்களா இவங்க..! ஓணம் பண்டிகையில் கவனத்தை ஈர்த்த உயிர், உலகம்..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூண்டி (திருவள்ளூர்) 9 செ.மீ, பொன்னை அணை (வேலூர்) 7 செ.மீ, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 6 செ.மீ, சோழவரம் (திருவள்ளூர்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அம்மூர் (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம், வளசரவாக்கம் (சென்னை), மணலி (சென்னை) தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:West Bengal: சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து - 6 பேர் பரிதாப பலி!