சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று (டிசம்பர் 21) முதல் சனிக்கிழமை (டிசம்பர் 25) வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
21.12.2021 முதல் 22.12.2021: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.