தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் - chennai district news

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை
மழை

By

Published : Sep 16, 2021, 3:48 PM IST

தென்மேற்கு பருவ காற்று, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் (செப்.16), நாளையும் (செப்.17) தென் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் (செப்.18) உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.19) வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 விழுக்காடு மழைப் பதிவாகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல் பகுதி

நாளை (செப்.16) தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details