சென்னை: கர்நாடகாவில் பூதாகரமாக உருவெடுத்துள்ள ஹிஜாப் விவகாரத்தில், கர்நாடக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கண்டித்து, நேற்று (பிப்.10) சென்னை பனகல் மாளிகை முன்பு இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உடை அணிவது அரசியல் அமைப்பால் வழங்கப்பட்ட உரிமை, மத உணர்வைத் தூண்டி மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஜான்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நாட்டில் உள்ள பிரச்னைகளை திசை திருப்பவும், இஸ்லாமியப் பெண்களின் கல்வி உரிமையை பறிக்கவும் முயல்கின்றன.