சென்னை:இஸ்ரோவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுனுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி என்பவர், மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரோவுக்கான தமிழகத்தின் குரல் அடங்கியது... மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைவு! மாரடைப்பால் உயிர் பிரிந்தது! - வளர்மதி இஸ்ரோ
ISRO Valarmathi Dead: இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி, சென்னை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கடைசியாக சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான திட்டத்தில் கவுன்டவுன் அறிவிப்பு வழங்கும் பணியில் வளர்மதி ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published : Sep 4, 2023, 11:31 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் குரல் கொடுத்து வந்த வளர்மதி, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ரேஞ்ச் ஆபரேஷன்ஸ் திட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு வளர்மதி கவுண்டவுன் குரல் கொடுத்து வந்தார்.
சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்திய போது, அதற்கான கவுன்டவுன் அறிவிப்பை வளர்மதி வழங்கி இருந்தார். சந்திரயான் 3 திட்டமே அவரது இறுதி பணி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.