சென்னை: அரசுப் பள்ளிகளில் டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின் சாதனங்கள் பழுது பார்த்தல், ஆடை வடிவமைத்தல் உள்ளிட்ட பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் 9,10ஆம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடுவதற்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது முதற்கட்டமாக மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறபித்துள்ளனர்.
முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை பள்ளிக்கல்வித்துறை மூட உத்தரவிட்டுள்ளது.