தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில் பாமக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்தியலிங்கம், இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பாமக வேட்பாளர்! - 2019தேர்தல்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வைத்தியலிங்கம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பாமக வேட்பாளர்!
பின்னர் இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் சோமராஜசேகர் விஜயகாந்தை சந்தித்து தனது ஆதரவை அளித்தார். பின்னர் தேமுதிக சார்பாக நடக்கும் பரப்புரைகளில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தேமுதிக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அனகை. முருகேசன், இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் அரசுகுமார், கோட்டத்தலைவர் ராமர், இளைஞர் அணி செயலாளர் சரத்குமார் உடன் இருந்தனர்.