தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 23ஆம் தேதி நடபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துவருகிறது. இந்த தேர்தலில் புதிதாக விவிபேட் எனப்படும் வாக்கு பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உபயோகிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை பயிற்சி: துணை தலைமை தேர்தல் அலுவலர் சென்னை வருகை - Indian Deputy Assistant Officer
சென்னை: வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய துணை தலைமை தேர்தல் அலுவலர் சந்தீப் சக்சேனா நாளை சென்னை வருகிறார்.
துணைத்தலைமை தேர்தல் அலுவலர் சந்தீப் சக்சேனா
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு மற்றும் விவிபேட் வாக்கு ஆகியவற்றை கணக்கிடுவது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் அலுவலர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனர்.