தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமுறை மீறல்... திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரில் திமுக கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதாக திமுக பிரமுகர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Violation of election rules Case filed against DMK official  Case filed against DMK official  தேர்தல் விதிமுறை மீறல் திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு  DMK  தேர்தல் விதிமுறை மீறல்  திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
Case filed against DMK official

By

Published : Mar 1, 2021, 12:57 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் சுவரொட்டி, பேனர் வைக்கக்கூடாது எனவும் பொதுமக்களுக்கு சலுகை பொருள்கள் வழங்கக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட கட்சிகள் சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை நீக்கி வருகின்றனர். இந்நிலையில், மேடவாக்கம் டேங்க் சாலை செக்ரடேரியட் காலனி 9ஆவது தெரு சந்திப்பில் உள்ள பொதுக் கழிப்பிட சுவரில் திமுக கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தேர்தல் விதிகளை மீறி திமுக கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

மேலும் அதனை அகற்றாமல் இருந்ததால் சிவலிங்கத்தின் மீது தேர்தல் விதிமுறைகள் மீறுதல், பொது இடத்தில் சுவரொட்டி ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தலைமை செயலக காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:பரிசுப்பொருள் அறைக்கு பொதுமக்கள் முன்னிலையில் சீல்!

ABOUT THE AUTHOR

...view details