தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி... மீறினால் நடவடிக்கை! - அரசு மீது நீதிமன்றம் நம்பிக்கை

Vinayagar Statue high court verdict
Vinayagar Statue high court verdict

By

Published : Aug 19, 2020, 11:22 AM IST

Updated : Aug 19, 2020, 12:28 PM IST

11:20 August 19

சென்னை: தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து முன்னணியினர், 'ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம்' என்று தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்தத் தலைவர் ராமகோபாலன், காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 19) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட ஏற்கனவே
தடைவிதித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அனுமதியின்றி சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர். 

இதையும் படிங்க...ஓபிசி இட ஒதுக்கீடு: இறுதிசெய்யும் குழு உறுப்பினராக உமாநாத் நியமனம்!

Last Updated : Aug 19, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details