சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிடோர் நடித்துள்ள படம் மாஸ்டர். பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்தப் படம் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
மாஸ்டர் படத்தில் இதுவரை இல்லாத விஜய்யின் கதாபாத்திரமும், விஜய் சேதுபதியின் வித்தியாசமான வில்லத்தனமும் ரசிக்க வைத்தது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் மாஸ்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.