தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்ட்ரலில் 24 மணி நேரமும் பறக்கும் 100 அடி தேசியக்கொடி ஏற்றிவைப்பு - 100feet national flag

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 24 மணி நேரம் பறக்கும் விதமாக 100 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஷ்தா இன்று ஏற்றிவைத்தார்.

By

Published : Feb 15, 2019, 10:03 PM IST

தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ளதைப்போலவே, சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் நுாறு அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்கவிட திட்டமிடப்பட்டது.



முதலாவதாக இந்த ஆண்டு 2019-ல் ஜனவரி 30-ம் தேதி கோயம்புத்துார் ரயில் நிலையத்தில் இதே அளவிலான தேசியக்கொடியை தெற்கு ரயில்வேயின் கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஏற்றிவைத்தார்.

அதன்படி, சென்ட்ரல் நிலையத்தில் நுாறு அடி நீளமுள்ள கம்பத்தில் தேசிய கொடியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஷ்தா ஏற்றிவைத்தார். மேலும், இந்த தேசிய கொடியானது முழுமையாக மின்இணைப்பு மூலம் ஏற்றப்பட்டது. தமிழகத்தில் இரண்டாவதாக நுாறு அடி நீளமுள்ள தேசிய கொடி கம்பம் இதுவாகும்.

இந்த தேசியக் கொடியானது முப்பது அடி நீளமும், அகலமும், ஒன்பதரை கிலோ எடை கொண்டுள்ளது. இதற்கு பதிமூன்று லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்னர், ரயில்வேயின் பொது விதிகள் 1976 என்ற புத்தகத்தையும் வெளியிட்ட தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பேசுகையில்,

“இந்தியா முழுவதும் எழுபத்தி ஐந்து ரயில் நிலையங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்ட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளோம்.


ஏற்கனவே கடந்த மாதம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலும் தேசிய கோடி ஏற்றப்பட்டது. கூடிய விரைவில் எழும்பூர் ரயில் நிலையத்திலும் ஏற்றப்படும்.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் அதிவிரைவு ரயில் கூடிய விரைவில் இயக்கப்படும். பாம்பன் பாலம் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் ரயில் போக்குவரத்து இயக்கப்படும்.

டிரெயின் 18 சென்னை ஐசிஎப் இல் தயாரிக்கப்பட்டு, பிரதமர் மோடி தொடங்கி வைத்து வாரணாசி பகுதியில் இயங்கிவருகிறது. அந்த ரயிலை தென்னக ரயில்வேயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள தடுப்பு சுவர்கள் அனைத்தும், விபத்து ஏற்படாதவாறு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துகிறோம். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் போராடினால் மட்டுமே தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details