தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.