தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையூட்டுப் புகார்: சுற்றுச்சூழல் துறை அலுவலரின் வங்கியை சோதனை செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை! - environmental officer pandian caught on it raid

சென்னை: சுற்றுச்சூழல் துறை அலுவலரான பாண்டியனின் வங்கிக் கணக்குகளைச் சோதனை செய்திட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் வங்கி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

லஞ்சப்
லஞ்சப்

By

Published : Dec 18, 2020, 12:33 PM IST

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்புப் பொறியாளர் பாண்டியன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அப்போது, அலுவலகத்தில் மட்டும் 89 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கமும், மூன்று கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

பறிமுதல்செய்யப்பட்ட நகைகள், பணம், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், பாண்டியனுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாண்டியனுக்குச் சொந்தமான சென்னை, புதுக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொள்ள வங்கி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details