தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள இளங்கலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பிடெக் உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு, ஆகியவற்றில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு! - சென்னை
சென்னை: கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியை கால்நடை மருத்துவர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
radhakrishnan
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பில் மாணவி சுவாதி முதலிடத்தையும், தூத்துக்குடி மாணவி ஜோன் ஸில்வியா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாணவி ஹர்ஷா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். பீட்டர் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சிவகங்கை மாணவி பிரியதர்ஷினி முதலிடத்தையும், திருச்சி மாணவி ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும், தர்மபுரி மாணவர் சுரேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.