இதுகுறித்து வேல்முருகன் கூறியதாவது, 'மைக்ரோ சிறுபான்மை உயர் வகுப்பினர் தவிர, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை அபகரித்து, நீட் நுழைவுத்தேர்வை மோடி அரசு திணித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி, மலைவாசி, ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை மறுத்தும், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் முடித்த பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு முதுநிலை மருத்துவம், படிக்க இடம் கிடையாது என்கிறார்.
இத்தனைக்கும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு ஒன்றியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிறார், மோடி.