விசிக தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்னதாக கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகள் குறித்தான பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்பு உள்ளிட்ட பல்வேறுஅமைப்பினர் fருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் பிரபல நடன இயக்குனரும், நடிகைமான காயத்ரி ரகுராம் திருமாவளவன் பேச்சு குறித்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காயத்ரி ரகுராமிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய காயத்ரியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
காயத்ரி ரகுராம் வீட்டில் முற்றுகையிட வந்த பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது காயத்ரியை கைது செய்யவில்லையென்றால், தாங்கள் தீக்குளிப்போம் என சில பெண்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.