தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக உள்ளது - திருமாவளவன் - vck party protest

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஓய்வுபெற்ற நடிகர்கள் என்று காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக திகழ்கின்றது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.

vck
vck

By

Published : Oct 28, 2020, 9:17 PM IST

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விசிக கட்சி சார்பில் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஓபிசி என்ற பெரும்பான்மையான இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது எனச் சொல்வது இந்துக்கள் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அரசுதான். வேல் பூஜை, இந்துக்கள் மனதை நடிகர் சூர்யா, நடிகர் விஜய் சேதுபதி, நெல்லைக்கண்ணன் புண்படுத்திவிட்டார்கள் என்றும் இன்று நான் புண்படுத்திவிட்டதாக கூறுபவர்கள் ஓபிசி இந்துக்களுக்கு இடஒதுக்கீடு பற்றி ஏன் பேசவில்லை?

வட மாநிலங்களைப் போல் மதக்கலவரத்தை தூண்டி இங்கு ஆட்சி பிடிக்க முடியாது. இது பெரியார் மண். காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக உள்ளது.

ஓய்வுபெற்ற நடிகர்கள், ஐஏஎஸ் போன்றவர்களைக் கொண்டு பாஜக தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகின்றது. சமூக நீதி பற்றி ஒன்றும் பாஜகவிற்குத் தெரியாது.

வெற்றிவேல் வீரவேல்தான் அவர்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு 15 விழுக்காடு இடஒதுக்கீடு ஆல் இந்தியா கோட்டாவிற்கு கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் எவராலும் மனுநீதி பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவர். அவர்கள் பேசியதை நான் இன்று பேசுகின்றேன்" என்றார்.

இதையும் படிங்க:மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விசிக ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details