தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முண்டாசை காவி ஆக்கியது பாரதியாரை கொச்சைப்படுத்தும் செயல்: திருமாவளவன் - விசிக

சென்னை: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் பாரதியார் முண்டாசை காவி நிறமாக வரைந்துள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Thirumavalavan

By

Published : Jun 5, 2019, 1:28 PM IST

விசிக தலைவர் திருமாவளவன் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பள்ளிவாசலில் காயிதே மில்லத்தின் நினைவடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கன்னிய தமிழர் காயிதே மில்லத்துக்கு வீர வணக்கம் செலுத்தினேன். தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை காத்த பெருமை காயிதே மில்லத்தைச் சாரும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய தமிழ்த் தலைவர், காயிதே மில்லத். அப்படிப்பட்ட தலைவரை நினைவுகூர்ந்து என்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், சாதி, மதவெறி சக்திகளிடம் இருந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதி ஏற்போம் என விசிக அறைகூவல் விடுகிறது. இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

விசிக தலைவர் திருமா அளித்த பேட்டி

தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தது பற்றி திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கை தமிழ்நாட்டில் இந்தியை மூன்றாவது மொழியாக ஏற்றுக்கொள்ள வாசல் திறக்கப்படுகிறது என அர்த்தம். அதை ஒருபோதும் தமிழ் தேசிய சக்திகள் அனுமதிக்கமாட்டோம். இந்தி, சமஸ்கிருதம் மூலம் அவர்கள் விரும்பும் கலாசாரத்தை திணிக்க பார்க்கிறார்கள். இந்தித் திணிப்பு அடிப்படை கலாசாரத் திணிப்பு ஆகும். அதன் அடிப்படையில் தான் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்.

தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் பாரதியார் முண்டாசை காவி நிறத்தில் வரைந்துள்ளார்கள். எந்த அளவிற்கு காவியின் தாக்கம் தமிழ்நாட்டை ஆளும் அதிமுக மேல் உள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறை நீக்குகிறார்கள், பாரதியார் முண்டாசை காவி ஆக்குகிறார்கள். படிப்படியாக அதிமுகவை சங் பரிவார் அமைப்பாக மாற்றி வருகிறார்கள் என்று தெரிகிறது. முண்டாசை காவி ஆக்கியது பாரதியாரை கொச்சைப்படுத்தும் செயல், அவரின் கொள்கைக்கு எதிரானது” என்று பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details