தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் குறித்து அவதூறு, காயத்ரி ரகுராம் மீது புகார்! - gayathri raguram criticizes thirumavalavan

சென்னை : விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூறாக விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் பன்னீர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

vck complaint against gayathri raguram for defaming Thirumavalavan
vck complaint against gayathri raguram for defaming Thirumavalavan

By

Published : Jul 24, 2020, 8:23 PM IST

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவனை குறித்து அவதூறாக விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் பன்னீர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமூக வலைதளங்களில் தொடர்ந்து விசிக கட்சித் தலைவர் திருமாவளவனை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் காணொலி பதிவிட்டுவருகின்றார்.

காயத்ரி ரகுராம் மீது புகார்

குறிப்பாக அவரது பேச்சு சாதி வெறியை தூண்டும் வகையில் உள்ளது. அது பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் உடனடியாக காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் தற்போது புகார் அளித்துள்ளேன்.

மேலும் காயத்ரி ரகுராம் பேசிய காணொலி, ஆடியோ ஆதாரங்களை சமர்பித்து உள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்து உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க... திமுகவுக்கு கூஜா தூக்கும் திருமாவளவன்: காயத்ரி ரகுராம் கடும் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details