சென்னை: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரான அனுராதா, அதே துறையை சேர்ந்த மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பேராசிரியர் அனுராதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விசிக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரணை நடத்தி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் துரைசாமி, தமிழ் துறை தலைவர் அனுராதா ஆகிய இரண்டு பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் பேராசிரியர் அனுராதாவை எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மய்ய சென்னை மாவட்ட செயலாளர் இரா.செல்வம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.