சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் குடும்பத்தினருடன் வசித்துவரும் வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் அருணுக்கு இன்று (நவ16) காலை 8 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அருண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.