இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் பொதுச் செயலாளர் சண்முகம் கூறியதாவது, “குஜராத் விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ள பெப்சி நிறுவனம் உடனடியாக அந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். அதோடு விவசாயிகள் மீது வீண்பழி சுமத்தியதற்காக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெப்சி நிறுவனத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் - விவசாயிகள் ஆர்பாட்டம்
சென்னை: விவசாயிகள் மீது வழக்கு தொடுத்துள்ள பெப்சி நிறுவனத்தை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, பெப்சி குளிர்பானத்தை தரையில் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டம்
அப்படி கேட்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெப்சி நிறுவனத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இந்த சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியும், தன்னை குஜராத்தி என்று அடையாளப்படுத்தி கொள்ளும் பிரதமர் மோடி மெளனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.