தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைத்தறி உள்ளிட்ட துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்! - சென்னை மாவட்ட செய்திகள்

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கைத்தறி உள்ளிட்ட துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்!
கைத்தறி உள்ளிட்ட துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்!

By

Published : Oct 23, 2021, 5:41 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்படும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை இன்று (அக்.23) வெளியிட்டார்.

கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி, மாநிலம், நாட்டில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளின்படி உற்பத்தி செய்யும் பொருள்களை பயன்படுத்துவதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும் அப்பொருள்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக சட்டப்படி வழங்கப்படும் சான்றாகும்.

புவிசார் குறியீடு

புவிசார் குறியீட்டின் மூலம் அப்பொருட்களுக்கான தரம், நற்பெயர் மற்றும் அடையாளம் காக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இதனால் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் தரம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அதன் தொன்மை பேணி பாதுகாக்கப்படுகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றவைகளைத் தவிர பிறபகுதி, மாநிலம், நாட்டில் உள்ளவர்கள் அப்பொருட்களை உற்பத்தி செய்யவோ, சந்தைப்படுத்தவோ சட்டப்படி இயலாது. இதன்மூலம் போலியாக உற்பத்தி செய்வதும் கள்ளச்சந்தையில் விற்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

கைவினைஞர்கள் படைப்பு

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புவிசார் குறியீட்டின் மூலம் கைவினைஞர்கள் படைப்புகள் உலகளவில் கொண்டு சென்று சந்தைப் படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

தமிழ் தறி தொகுப்பு

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம், நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களை கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதேபோல் திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம் - கோயம்புத்தூர் பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள், சின்னாளப்பட்டி பட்டு, பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல் - பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமக்காளம் 30 புதிய வடிவமைப்புகள், குழந்தைகளுக்கான காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை 50 புதிய வடிவமைப்புகள் உள்ளிட்டவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக 'தமிழ்த்தறி' என்ற தொகுப்பினையும் முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details