தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்கக் கோரி வழக்கு: அறநிலையத் துறைக்கு உத்தரவு - mhc order to Charitable Department Commissioner

வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்கக் கோரிய மனுவைப் பரிசீலித்து மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்க கோரி வழக்கு
ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்க கோரி வழக்கு

By

Published : Nov 13, 2021, 6:10 PM IST

சென்னை: சின்ன காஞ்சியில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள் மோகினி அலங்கார நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாடுவது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

இதற்கு ஸ்ரீ தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகக் கூறி, தென் கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் பிரச்சினைக்குச் சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா தரப்பில் கோரப்பட்டது.

அறநிலையத் துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினை தொடர்பாக அளித்த விண்ணப்பம் குறித்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க:சிலம்பத்தில் சிகரம் தொடத் துடிக்கும் மதுரை சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details