சென்னை: ருத்ர தாண்டவம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பின்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, சீமான், சுப வீரபாண்டியன் மற்றும் ஊடகவியலாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசினார்.
ஊடகவியலாளர்கள் மதமாற்றத்துக்கு துணை போகக் கூடாது என கேட்டுக்கொண்ட ஹெச். ராஜா, அப்போது தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி ஊடகத்தை விமர்சித்தார். ஹெச். ராஜாவின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.