சென்னை: நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பல்வேறு சிறப்பசங்களைக் கொண்டு பல்வேறு பெரு நகரங்களை இனைக்கும் வகையில் செயல்படுகிறது ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம். இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதன் சேவையை பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் அதன் சோதனை ஓட்டத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக சென்னையில் இருந்து நெல்லை வரை நிறைவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் சோதனை ஓட்டம் நேற்று (செப்.21) சென்னையில் இருந்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று (செப்.22) நெல்லையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கும் நேரத்திலே சோதனை ஓட்டமானது தொடங்கியுள்ளது.
சுழற் நாற்காலி, ஏசி, ஜிபிஎஸ் டிராக்கர், பாதுகாப்பை உறுதி செய்ய கேமரா போன்ற பல்வேறு வசதிகளுடன் செயல்படுவது இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டுள்ளது. நாள்தோறும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். வாரத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினம் மட்டும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படாது என இரயில்வே அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.
மேலும், சோதனையோட்டத்தின் போது, இந்த ரயிலில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சென்றனர். காலை 7.30 மணிக்கு விழுப்புரத்திற்கு சென்றடைந்த நிலையில், அங்கு 2 நிமிடம் பயணிகளின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்றடைந்தது.