சென்னை: அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் ஓ.பி.எஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓபிஎஸ்-க்கு அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனது ஆதரவாளருடன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓபிஎஸ் இன்று (நவ.09) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும்போது, "அதிமுகவின் கரை வைத்த வேட்டியைக் கட்டுவது என்பது கட்சியில் இருக்கும் அவர்களது உரிமை மற்றும் அது அவரவர் விருப்பம். அதைத் தவறாக வெளியில் பரப்பி வருகின்றனர்.