20 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களை உறுப்பினராக பொறுப்பேற்று நாடாளுமன்றம் சென்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கன்னிப்பேச்சை தொடங்கிய காவியத்துக்கு கள்ளிக்காட்டுக்காரனின் கவிதை! - teitter
மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசர் வைரமுத்து
அதில், "சிறுத்தைபோல் நடந்து சென்றாய் செம்மொழி உறுதி பூண்டாய் நிறுத்தவே முடியவில்லை நீள்விழி வடித்த கண்ணீர் போர்த்திறம் பழக்கு – விட்டுப் போகட்டும் வழக்கு – உன் வார்த்தைகள் முழக்கு – நீ வடக்கிலே கிழக்கு", இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.