தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் என்பது தேர்வுமல்ல, தற்கொலை என்பது தீர்வுமல்ல' - கவிஞர் வைரமுத்து இரங்கல் - Vairamuthu tweet

சென்னை: மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vairamuthu TWEET NEET
Vairamuthu TWEET NEET

By

Published : Sep 12, 2020, 4:42 PM IST

மதுரை தல்லாகுளத்திலுள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா (வயது19). இவரது தந்தை முருக சுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக உள்ளார்.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீ, தேர்வு அச்சத்தால் இன்று (செப்.12) அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது தற்கொலை முடிவு குறித்து கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து,

ஓ!

மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;

தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும் தங்களை

அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;

உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;

முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தகனம்!

ABOUT THE AUTHOR

...view details