இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வளைகுடா நாடுகளில் இருக்கின்ற இந்தியர்களை மீட்டு வருவதற்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதுவும், சென்னைக்குக் குறைந்த அளவிலேயே வருகின்றன. அதுபோல், கடந்த நான்கு மாதங்களாக, சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானம் இல்லை.
குறிப்பாக, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த, அங்கே பணிபுரிகின்ற 800க்கும் மேற்பட்டவர்கள், சென்னையில் இருக்கின்றனர். அவர்களுள் பலரது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனவே, அவர்கள் பஹ்ரைன் திரும்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சென்னையில் இருந்து விமானத்தை இயக்குவதாக, கல்ஃப் ஏர் விமான நிறுவனம், பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.