மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு அறிவித்து இருக்கின்ற நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி என நிரூபிக்கப்பட்ட சூழலில் 21ஆம் நூற்றாண்டில் 10 சதவீத வளர்ச்சியை பெறுவோம் எனக் கூறுவது நகைச்சுவையான கருத்தாகும்.
அனைத்தையும் தனியார்மயமாக்குவது என்று முடிவுக்கு வந்ததால் 14 லட்சம் பேர் வேலை செய்யக்கூடிய ரயில்வே துறையை தனியார் மயமாக்கி உள்ளனர். நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் உதவி வரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பது, மன்னிக்க முடியாத செயலாகும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், விவசாயிகள் நிவாரணம் பெறுவதற்கும் எந்தவிதமான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் கிடையாது.
வைகோ செய்தியாளர் சந்திப்பு ஏற்றுமதி சந்தை இழப்பீடு ஆகிவிட்டது. உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி இல்லை என்ற காரணங்களை சொல்லி அதற்கான சட்டங்களை கொண்டு வரப்படுவதாக சொல்லியிருக்கின்றனர். இது தொழிலாளர்களை மிகவும் பாதிக்கும். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் எந்தத் துறை சார்ந்தவர்களுக்கும் மனநிறைவை அளிக்கவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: ''புதிய மொந்தையில் பழைய கள்''-தான் மத்திய பட்ஜெட்: விவசாய சங்கத் தலைவர் தெய்வசிகாமணி!