தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘காலத்தால் அழியாத முத்தமிழறிஞர்’ - கருணாநிதி சிலைக்கு வைகோ மரியாதை - vaiko

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

vaiko

By

Published : Jun 3, 2019, 12:12 PM IST

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காலத்தால் அழியாத முத்தமிழறிஞர், வாழ்வெல்லாம் ஒய்வறியாத கலைஞரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் மறைந்து எட்டு மாத காலம் ஆகியும் அதற்குள்ளாக திமுகவை கோட்டையாக கட்டிக்காத்து அவர் கூறியது போலவே இமாலய வெற்றியைத் திமுக தலைவர் ஸ்டாலின் பெற்றுள்ளார்.

இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, ஹைட்ரோகார்பன் திணிப்பு உள்ளிட்ட திணிப்பை மத்திய பாஜக அரசு செய்து வருவதை எதிர்த்து போராட வேண்டிய கடமையோடு கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாளான இன்று கருணாநிதி, அண்ணா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு அருகில் சூளுரை ஏற்போம். அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீர்வோம், வன்முறை தவிர்த்து வறுமை நீக்குவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநில சுயாட்சி காப்போம் என்ற முழக்கங்களை சூளுரையாக்கிக் கொண்டு அண்ணாவின் வழியில் பயணிப்போம் என்று இந்த திருநாளில் மதிமுக சார்பில் சபதம் ஏற்கிறோம்” என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details