தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகோவுக்கு தண்டனை வழங்கியிருப்பது துரதிர்ஷ்டம் - திருமுருகன் காந்தி! - தேச துரோக வழக்கு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தேச துரோக வழக்கில் 124ஏ பிரிவின் கீழ் தண்டனை வழங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

vaiko

By

Published : Jul 5, 2019, 3:22 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில்,

இந்திய அரசின் தேச துரோக வழக்கில் 124 ஏ பிரிவின் படி வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 'தமிழ் ஈழப் படுகொலை விவகாரத்தில் இந்திய அரசுதான் துரோகம் செய்துள்ளது, இந்திய அரசுதான் அதற்குக் காரணமாகி உள்ளது, இந்த காரணத்தை நான் இளைஞர்களிடம் கொண்டு செல்வேன்' என்று வைகோ கூறியதற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. 124ஏ பிரிவு சட்டம் என்பது மகாத்மா காந்தியாலேயே விமர்சிக்கப்பட்ட ஒன்று. பெரியார் இச்சட்டத்தை விமர்சித்ததால் அவரது அரசியல் பயணத்தில் பலமுறை அவர் கைது செய்யப்பட்டு, அவரது பத்திரிகையும் முடக்கி வைக்கப்பட்டது.

வைகோவிற்கு 124ஏ பிரிவின் கீழ் தண்டனை வழங்கியிருப்பது துரதிர்ஷ்டம்

இந்தப் பிரிவானது வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் குரல் உயர்வதை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது, இந்தப் பிரிவை தற்போது விடுதலை அடைந்த பிறகும் அரசு வைத்திருப்பது அவமானப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்திய சட்ட கமிஷன் 124ஏ பிரிவை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த பின்பும் இந்தப் பிரிவின்படி தண்டனை வழங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details