தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லைகா தயாரிப்பில் வடிவேலு? - வடிவேலுவின் படங்கள்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vadivel new movie  வடிவேலு புதிய படம்  லைகா தயாரிப்பு  vadivelu new emtry  vadivelu movie  வடிவேலுவின் படங்கள்  vadivelu movie new update
வடிவேலு

By

Published : Aug 23, 2021, 9:17 PM IST

நாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியம். இந்த இரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவலைகளை மறக்கச் செய்து இன்பக்கடலில் ஆழ்த்தினார் வைகை புயல் வடிவேலு.

நடிகர் ராஜ்கிரண் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான வடிவேலு, தொடக்கத்திலிருந்தே வித்தியாசமான உடல் மொழியாலும், குரல்வளத்தாலும் கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.

வித்தியாசமான உடல் மொழி

ஒரே வருடத்தில் பல ஹிட்

அடுத்து சின்னகவுண்டர் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு உதவியாளராக நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இணையர்களான செந்தில், கவுண்டமணி ஜோடியுடன் கவனம் ஈர்த்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நீலக்குயில்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர், குறுகிய காலத்திற்குள் அந்தக் காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.

சிக்சர் அடித்து வந்த வடிவேலு

இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘காதலன்’, ‘வாட்ச்மேன்’, ‘முத்து’, ‘காதல் தேசம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘முதல்வன்’ போன்ற திரைப்படங்களின் நகைச்சுவை கதாபாத்திரங்கள், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

வடிவேலுவின் அசத்தல் காம்போ...

காதலன் திரைப்படம் வெளியான பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் வடிவேலும் தவிர்க்க முடியாதவராக மாறினார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி சிக்சர் அடித்து வந்த வடிவேலு, தொடர்ந்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நகைச்சுவை நாயகனாக மாறினார்.

பெரும் ஆளுமைகள் இருந்தாலும் வடிவேலுவுக்காக ஓடிய படங்களின் பட்டியல் ஏராளம். “பாரதி கண்ணம்மா”, “வெற்றிக் கொடி கட்டு”, “வின்னர்”, “ஃப்ரண்ட்ஸ்”, “மருதமலை”, “சந்திரமுகி”, “ஆதவன்” போன்றவை குறிப்பிடத்தக்கன.

புலிகேசி

இவரை கதநாயகனாக இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் இயக்குனர் சங்கர் அறிமுகப்படுத்தினார். இப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும், அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளியான இந்திரலோகத்தில் நான் அழகப்பன் திரைப்படம், எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

மீண்டும் களமிறங்கும் வடிவேலு

இதையடுத்து வடிவேலுவை வைத்து இயக்குனர் ஷங்க இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் எடுத்து வந்தார். அதில் வடிவேலுக்கும், சங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும் இவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் சொல்லிவிட்டது.

நாய் சேகர்...

இதனிடையே விஜயின் மெர்சல், விஷாலின் கத்திச்சண்டை, உள்ளிட்ட படங்களில் நடித்து, மீண்டும் தனது இன்னிங்ஸை தொடங்க ஆயுத்தமாகி வருகிறார். முன்னதாக சுராஜ் இயக்கிய இவர் நடித்த தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடி பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இணைகின்றார்கள். சுராஜ், வடிவேலுவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் படத்தை தொடங்க சுராஜ் திட்டமிட்டுள்ளதாகவும், படத்தைதயாரிக்க லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தலைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details